தமிழ்நாட்டில் 95.39% SIR விண்ணப்பங்கள் வினியோகம் - 17.37% வாக்காளர்கள் மட்டுமே விண்ணப்பம் பூர்த்தி செய்துள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவம் 95 புள்ளி ஒன்று ஆறு சதவீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 17 புள்ளி மூன்று ஏழு சதவீத வாக்காளர்கள் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ள நிலையில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 390 பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இப்பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4ம் தேதி முதல் நேற்று வரை 5 கோடியே பத்து லட்சத்து 8 ஆயிரத்து 908 வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 95 புள்ளி ஒன்று ஆறு சதவீதம் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வரை 2 கோடியே 23 லட்சத்து 56 ஆயிரத்து 42 பேரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதாவது 17 புள்ளி மூன்று ஏழு சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கொளத்தூர் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முறையாக வாக்காளர்களை சந்தித்து விண்ணப்பம் வழங்கவில்லை குற்றச்சாட்டுகள் எழுந்ததால், வரும் 25ம் தேதி வரை சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 160 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Night
Day